“அய்யோ இத எப்படி சமாளிக்குறது”… சிக்கிய கோபி… பாக்கியலட்சுமி தொடரில் பரபர Moment

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

Bhagya suspects gopi june 8 to 11 episode

Also Read | கமல் & லோகேஷுடன் விஜய் சேதுபதி… ‘விக்ரம்’ பார்த்துட்டு பிரபல நடிகர் Tweet ...Viral pic

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Bhagya suspects gopi june 8 to 11 episode

கோபியின் Escapeகள்…

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, பாக்கியாவின் தோழியான ராதிகாவுடன் மறை உறவில் இருந்து வருகிறார். இது இருவருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறார். ஆனால் எந்த நேரமும் கோபி- ராதிகா விவகாரம் அவரது குடும்பத்துக்கு தெரிந்து மாட்டிக் கொள்வதற்கான சூழல்கள் வந்தாலும், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் கோபி எப்படியாவது தப்பித்து சென்று கொண்டிருக்கிறார்.

Bhagya suspects gopi june 8 to 11 episode

ராதிகாவுக்கு தெரிந்த உண்மை…

ஒருகட்டத்தில் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார். இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.  இதேபோல போதையில் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கும் உளறிவிட, பாக்கியாவுக்கும் சந்தேகம் வருகிறது.

Bhagya suspects gopi june 8 to 11 episode

பாக்கியாவின் கோபம்…

ராதிகாவுக்கு முழு உண்மையும் தெரிந்தாலும், இன்னும் தன் தோழியான பாக்கியாவிடம் கோபியைப் பற்றிய உண்மையை சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது பாக்கியாவின் சந்தேகமும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கோபியின் காரில் இருந்து பிளவுஸ் மற்றும் அதற்கான பில்லை எடுக்கும் பாக்கியா கோபியிடமே சென்று “என்னதாங்க நடக்குது என் வாழ்க்கைல. நான் உங்கள நம்பி ஏமாந்துட்டு இருக்கனா.. தினமும் குடிக்கிறீங்க. யாருக்கோ போன் பண்ணி டார்லிங், டியர் இப்படிலாம் பேசுறீங்க. எனக்கு பதில் தெரியணும். உண்மைய சொல்லுங்க” எனக் கேட்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கோபி பாக்கியாவை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார். இதனால் அடுத்தடுத்த எபிசோட்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read | ‘விக்ரம்’ Climax… பற்றி எரிந்த தியேட்டர் Screen… பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது.? Exclusive.

தொடர்புடைய இணைப்புகள்

Bhagya suspects gopi june 8 to 11 episode

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.