பொன்னியின் செல்வனுக்கு பிறகு, சூப்பர் ஹிட் இயக்குநருடன் இணையும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

After Maniratnam's Ponniyin Selvan, Vikram Prabhu to act director Suseenthiran's Next

இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனோ செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து விக்ரம் பிரபு, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். இந்த படத்தை நல்லுசாமி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறதாம். ஜூலை மாதம் இந்த படம் வெளியாகிறது.

Entertainment sub editor