www.garudabazaar.com

தளபதி65 கொண்டாட்டம் இன்னும் முடியல!! .. வெளியான தெறிக்கவிடும் #BeastSecondLook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தளபதி65.

BeastSecondLook Thalapathy vijay Sun pictures Nelson

நேற்றுவரை 65 என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்திற்கு தற்போது Beast என்று பிரம்மாண்டமாக டைட்டில் வைக்கப்பட்டதுடன், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

BeastSecondLook Thalapathy vijay Sun pictures Nelson

நடிகர் விஜய் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதகளப் படுத்தியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து வருவதுடன் தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் இந்த விருந்துடன் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.  ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் பிறந்தநாள் என்பதால் ஏற்கனவே கொண்டாட்டத்துக்காக தயாராக இருந்த ரசிகர்களுக்கு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் ட்ரீட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

BeastSecondLook Thalapathy vijay Sun pictures Nelson

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் விதமாக சன் பிக்சர்ஸ் ஒரு மெகா அறிவிப்பினை மீண்டும் பிரமாண்டமாக வெளியிட்டிருக்கிறது. அதன்படி Beast என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான இரண்டாவது லுக் போஸ்டரும் இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.

இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், “இன்னும் எதுவும் முடியல.. இனிமேல் தான் ஆரம்பமே!” என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளதுடன்  Beast படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது. 

அதன்படி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு Beast படத்தின் தெறிக்க விடும் 2வது லுக் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.   கெத்தாகவும் ஸ்டைலாகவும் விஜய் இருக்கும் இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்னால் ஹெலிகாப்டரும் அருகில் துப்பாக்கியும் இருக்கின்றன். பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

ALSO READ: "குக்கூ" பாடலை அடுத்து.. யுவன் - ‘தெருக்குரல்’ அறிவு கூட்டணியின்.. தரமான சம்பவம்!!.. எப்போ தெரியுமா?!

BeastSecondLook Thalapathy vijay Sun pictures Nelson

People looking for online information on Actorvijay Nelsondilpkumar anirudh poojahegde Breaking BEASTFirstLook Thalapathy65FirstLook, Beast, BeastSecondLook, Thalapathy65 will find this news story useful.