www.garudabazaar.com

"குக்கூ" பாடலை அடுத்து.. யுவன் - ‘தெருக்குரல்’ அறிவு கூட்டணியின்.. தரமான சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ, தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடி ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா தளத்தில் வெளியான தனி இசை பாடல் என்ஜாய் என்ஜாமி.

Yuvan join hands Enjoy Enjaami Arivu Dont Touch me

குக்கூ குக்கூ என்று தொடங்கும் இந்த பாடல் ராப் வகையில் முக்கியமான தனி இசை தமிழ் பாடலாக இந்த வருடம் ஹிட் அடித்தது. உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இந்தப்பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தனி இசைக் கலைஞர்களுக்கான நம்பிக்கையை இந்த பாடல் உருவாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.  தனி ஒரு பாடலை உருவாக்கி வெளியிடுவதற்கான ஒரு நம்பிக்கை ஒளியாக இந்த பாடல் இருந்திருக்கிறது என்பதை கண்கூடாக காண முடிகிறது. அதன்பிறகு பல்வேறு வகையிலும் பல மாநிலங்களிலும் இந்த பாடல் trend ஆனது.

இந்த நிலையில் பிரபல தனி இசை கலைஞர் தெருக்குரல் அறிவு மற்றும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இனையும் புதிய தனியிசைப் பாடல் ஒன்றை பற்றிய தகவலை யுவன் ஷங்கர் ராஜா, உலக இசை தினமான இன்று வெளியிட்டிருக்கிரார்.

அதன்படி ‘Dont Touch Me’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தனிப் பாடல் வரும் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தம்முடைய வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது தான் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்துக்கான முதல் சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா தம்முடைய U1records-ல் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: யோகி B -யா இது? Clubhouse-ல் சர்ப்ரைஸ் எண்ட்ரி! வாயடைத்து போன Fans!

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan join hands Enjoy Enjaami Arivu Dont Touch me

People looking for online information on Arivu, Dont Touch me, Enjoy Enjaami, Yuvan Shankar Raja will find this news story useful.