ஆல்யா மானஸாவிற்கு Grand-ஆக நடைபெற்ற Baby Shower - சஞ்சீவ் பகிர்ந்த வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 06, 2020 10:10 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி அறியப்படுகின்றனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் என ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்கு தங்கள் திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது சஞ்சீவ் கார்த்திக் 'காற்றின் மொழி' தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி ஆல்யா மானசாவிற்கு வளைகாப்பு நடைபெறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Tags : Alya Manasa, Sanjeev Karthik, Baby Shower