நடிகர் ரியோ வீட்டில் வளைகாப்பு விழா..!- சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ்.

Sivakarthikeyan gives surprise visit to Rio Raj wife's Baby showering ceremony

முன்னதாக விஜய் டிவியில் தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்த ரியோவுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் திரைப்படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், ரியோவின் மனைவி ஸ்ருதி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல சீரியல் பிரபலங்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்டு ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் சர்ப்ரைசாக பிரபல ஹீரோ சிவகார்த்திகேயன் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ருதிக்கு வளையல் அணிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ரியோ ராஜ் ஹீரோவாக அறிமுகமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rio Raj-Sruthi (@rioraj_sruthi) on

நடிகர் ரியோ வீட்டில் வளைகாப்பு விழா..!- சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல ஹீரோ! வீடியோ