மீண்டும் அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 24, 2019 06:02 PM
நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனனுக்கு சமீபத்தில் நடைபெற்ற சீமந்தம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘உறுமீன்’ திரைப்படத்தில் நடித்தபோது காதலில் விழுந்த நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு முத்ரா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
திரைத்துறையில் இருந்து ஒதுங்கி முழுமையாக குடும்ப பொறுப்பை ஏற்று தனது கணவன் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்த ரேஷ்மி மேனன் தற்போது இரண்டாவது குழந்தையை சுமந்து வருகிறார்.
சமீபத்தில் பாரம்பரிய முறைப்படி தனக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் புகைப்படங்களை நடிகை ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tags : Reshmi Menon, Bobby Simhaa, Baby Shower