www.garudabazaar.com

Baba Re Release : "பாபா வர்றாரு, லைட் ஆன் பண்ணுங்கடா".. கவுண்டமணி சொன்னதும்.. அரங்கில் நடந்த மேஜிக்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

baba movie re release goundamani theatre dialogue response

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், அதிகம் பரவலாக பேசப்பட்டிருந்தது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம், புது பொலிவுடன் திரை அரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாபா படத்தின் ரீ ரிலீஸிற்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது.

baba movie re release goundamani theatre dialogue response

அப்படி ஒரு சூழலில், பாபா படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப திரை அரங்குகளில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பாபா படத்தில் வரும் காட்சி ஒன்றில், ரஜினிகாந்த், கவுண்டமணி மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் திரை அரங்கில் திரைப்படம் பார்க்கும் காட்சிகள் வரும். அப்போது தியேட்டருக்குள் நுழையும் கவுண்டமணி, "டேய், பாபா வர்றாரு லைட் எல்லாம் போடுங்கடா" என கூறுவார். உடனடியாக தியேட்டருக்குள் லைட் ஆன் ஆகும். இந்த காட்சி தற்போது ரீ ரிலீஸில் இடம்பெற்றிருந்த நிலையில், கவுண்டமணி அப்படி கூறியதும் நிஜமாகவே சில திரை அரங்கில் லைட்டுகள் அந்த கணம் ஆன் செய்யப்பட்டு பின்னர் ஆப் செய்யப்பட்டது. அந்த சமயத்தில், படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

இது தொடர்பான வீடியோவை நடிகை மனிஷா கொய்ராலாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

baba movie re release goundamani theatre dialogue response

People looking for online information on Baba, Goundamani, Manisha Koirala, Rajinikanth will find this news story useful.