www.garudabazaar.com

AR ரஹ்மான் மகன் அமீன் கலந்து கொண்ட ஷூட்டிங்கில் நடந்த விபத்து.. அவரே போட்ட இன்ஸ்டா பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசை அமைப்பாளர் AR ரஹ்மான் மகன் அமீன் விபத்து ஒன்றில் இருந்து தப்பித்தது தொடர்பான விஷயம், தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AR Ameen shooting for song lights and truss crash down

Images are subject to © copyright to their respective owners

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எக்கச்சக்க திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் ரஹ்மான், தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளுக்கும் இசை அமைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் ஏராளமான திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இருந்து தப்பித்த அமீன்

30 ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து அவரது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கட்டி போட்டு வரும் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் தான் அமீன். தந்தையைப் போலவே சிறு வயது முதல் இசையில் அதிக நாட்டம் கொண்டு இயங்கி வரும் அமீன், திரைப்படங்களிலும் பாடல்களை பாடி உள்ளார். இது தவிர சில ஆல்பம் பாடல்களையும் பாடி உள்ள அமீன், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

AR Ameen shooting for song lights and truss crash down

 Images are subject to © copyright to their respective owners

சமீபத்தில் ஒரு பாடலின் சூட்டிங் வீடியோவில் அமீன் கலந்து கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் நடந்த விபத்து ஒன்றிலிருந்து நூலிழையில் தப்பித்தது பற்றி தான் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீன் பதிவிட்டுள்ளார்.

அறுந்து விழுந்த லைட்டுகள்

அவரது பதிவில், "இன்று நான் பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு, இரவில் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், நான் கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்திய போது, ​​​​எஞ்சினியரிங் மற்றும் பாதுகாப்பை அதற்கான குழு பார்த்து கொள்ளும் என்று நான் நம்பினேன்.

AR Ameen shooting for song lights and truss crash down

Images are subject to © copyright to their respective owners

அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த Truss மற்றும் விளக்குகள் அந்த இடத்தின் நடுவே நான் இருந்த போது கீழே விழுந்தன. ஒரு சில அங்குலங்களோ, ஒரு சில வினாடிகளோ முன்னும் பின்னும் ஆகி இருந்தால் அந்த மொத்த Rig -உம் எங்களின் தலையில் விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தோம். மேலும் இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை" என அமீன் குறிப்பிட்டுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்களையும் அமீன் பகிர்ந்துள்ளார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

AR ரஹ்மான் மகன் கலந்து கொண்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த எதிர்பாரா சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், அமீன் மற்றும் குழுவினர் யாருக்கும் எதுவும் ஆகாமல் அவர்கள் தப்பித்துக் கொண்டதையும் பலர் எண்ணி, அவர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

 

சமீபத்தில் கூட, நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் ஒரு எதிர்பாராத விபத்து நடந்து நூலிழையில் அவர் தப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

AR Ameen shooting for song lights and truss crash down

People looking for online information on AR Ameen, AR Rahman will find this news story useful.