www.garudabazaar.com

லியோ ஷூட்டிங்கில் உயர்தர கேமரா.. மனோஜ் பரமஹம்சா பகிர்ந்த வீடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Manoj Paramahamsa new video about camera in leo shooting

Images are subject to © copyright to their respective owners

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Manoj Paramahamsa new video about camera in leo shooting

Images are subject to © copyright to their respective owners

மிஷ்கின் - கெளதம் வாசுதேவ் மேனன்

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பி இருந்தனர்.

மனோஜ் பரமஹம்சா கொடுத்த அப்டேட்

அவ்வப்போது லியோ படத்தின் அப்டேட்கள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு சூட்டிங் உயர்தர கேமராக்களில் பயன்படுத்துவது தொடர்பான வீடியோ ஒன்றை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Manoj Paramahamsa new video about camera in leo shooting

Images are subject to © copyright to their respective owners

ரெட் பிராண்டைச் சேர்ந்த வி ராப்டார் என்னும் அதிநவீன கேமரா மூலம் துல்லியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கேமராவின் விலை, சுமார் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் குறிப்பிடும் சூழலில், இந்த கேமராவை ரெட் கேமராவின் பிக் டாடி என்றும் மனோஜ் பரமஹம்சா குறிப்பிட்டுள்ளார். அதே போல, லியோ போருக்காக அவை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புது டெக் கேமரா

அதே போல, இந்த கேமராவில் எக்கச்சக்க பலன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள சூழலில், இதனால் லியோ படத்தின் விஷுவல் காட்சிகள் நிச்சயம் வேற ஒரு தரத்தில் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் புதுவித கேமராக்களையும், புதுவித தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் சமயத்தில், லியோ படத்தின் காட்சிகளும் அந்த வகையில், அவை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Manoj Paramahamsa new video about camera in leo shooting

People looking for online information on Leo, Manoj Paramahamsa, Vijay will find this news story useful.