"இது பாக்கியா டீச்சர்'ல.." கண்ணீர் விட்டு கதறிய 'ராதிகா'.. கடைசியில் கோபி ஒண்ணு சொன்னாரு பாருங்க
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து திருப்புமுனை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மக்கள் மத்தியில் அசுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
நெருங்கிய தோழிகளாக பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோர் இருக்க, பாக்கியாவின் கணவரான கோபி, இருவருக்கும் இடையில் நாடகமாடி வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யவும் கோபி தயாராகி விட்டார்.
சிக்கப் போகும் கோபி?
இதற்காக, கோபி பார்த்த தில்லாலங்கடி வேலைகள் ஏராளம். பல சமயத்தில், மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் சிக்குவதற்கான சூழல் உருவான போதும், தனது சாமர்த்தியத்தால் அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொண்டே வருகிறார் கோபி. விரைவில் அவர் சிக்கப் போவது போன்ற காட்சிகள் இருந்தால் கூட, கடைசியில் எப்படியாவது தப்பித்து விடுவார்.
ராதிகா எடுக்கும் முடிவு
இந்நிலையில் தான், சமீபத்தில் வெளியான சில காட்சிகள், கோபியின் வண்டவாளங்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவே கருதும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்திற்கு பிறகு, ராதிகாவுடனான கோபியின் உறவு பற்றி பலருக்கும் தெரிந்து விடுகிறது. இதனால், அடுத்தடுத்து பல சண்டைகளு அரங்கேறி இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கோபியின் குடும்பத்தை பார்த்தே தீர வேண்டும் என முடிவு செய்கிறார் ராதிகா.
இதனைத் தவிர்ப்பதற்காக, பல முறைகளை கோபி பயன்படுத்தி பார்த்தும் அவை கை கொடுக்கவில்லை. இதனால், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, இவள் தான் என் மனைவி என கூறுகிறார். இது பாக்கியா டீச்சர்'ல என கேட்டபடியே கண்ணீர் விட்டு அதிர்ந்து போகிறார் ராதிகா.
கண்ணீர் விடும் ராதிகா
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அழுது கொண்டே இருக்கும் ராதிகாவிடம், "என் ஃபேமிலி'ய பாக்கணும்ன்னு சொன்னேல்ல. வா கூட்டிட்டு போறேன்" என கூறியபடி, ராதிகாவை அழைக்கிறார். இதனை மறுக்கும் ராதிகா, "எவ்ளோ பெரிய உண்மை'ய என்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்கல்ல" என கேட்க, இதற்கு பதில் சொல்லும் கோபி, "ஆமா, மறைச்சேன். ஏன் மறைச்சேன். நீ என்ன விட்டு போயிடக் கூடாதுன்னு தான் மறைச்சேன்" என சொல்கிறார்.
இதனைக் கேட்டதும் இன்னும் அதிர்ச்சியுடன் ராதிகா நிற்கும் நிலையில். அடுத்து பாக்கியலட்சுமி கதையில் என்ன திருப்புமுனை ஏற்பட போகிறது என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரு சிலர், இது கனவாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Baakiyalakshmi Radhika Shattered After Gopi Truth
- Baakiyalakshmi Radhika Shattered After Gopi Truth
- Baakiyalakshmi Serial Radhika Wants To See Gopi Family
- Gopi Clash With Radhika And Doubted Bhagyalakshmi
- Gopi Clash With Radhika And Doubted Bhagyalakshmi
- Baakiyalakshmi Gopi Escaped From Radhika In Birthday Party
- Bhagyalakshmi Pandian Store Sangamam Gopi Caught By Family
- Gopi Plan To Stop Birthday Plan Moorthi Found Him
- Gopi Plan To Stop Birthday Plan Moorthi Found Him
- Soorarai Pottru Hindi Remake Heroine Radhika Madan
- Soorarai Potru Hindi Remake Heroine Radhika Madan
- Bhakyalakshmi Serial Gopi Is In Problem Viral Episode
தொடர்புடைய இணைப்புகள்
- "எல்லாம் திட்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு"😔 மன வேதனையில் Baakiyalakshmi Fame Gopi
- நான் நினைச்ச மாதிரியே எனக்கு Wife அமைஞ்சுருக்காங்க😍Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts
- Sudhakar ஓட Romantic Side எனக்கு மட்டும் தான் தெரியும்😍Parithabangal Sudhakar Wife Opens Up💖 #MMK
- என்ன Sudhakar இதெல்லாம்🤣Gap-ல இந்த வேல-லாம் வேற பாக்குறீங்களா🙄 #MMK #Behindwoods #Shorts
- Lakshmi-க்கு முன்னாடி எனக்கு ஒரு Love இருந்துச்சு😳Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts
- என் மாமனார் கிட்ட தயங்கி தயங்கி தான் பேசுவேன்🙄 Parithabangal Sudhakar Opens Up😯 #MMK #Shorts
- Unconditional-ஆ இருக்கதுக்கு பேர் தான் Love💖 Parithabangal Sudhakar Talks About Love💕 #MMK #Shorts
- ஒரு வேல Media பக்கம் வரலன்னா இப்படி ஆகிருப்பேன்😮Parithabangal Sudhakar Talks About His Life😃 #MMK
- Gopi Marriage-அ விட Wife Birthday-வா முக்கியம்😳Parithabangal Sudhakar Friendship Goals😍 #MMK #Shorts
- Sudhakar I Love You-லாம் சொல்லவே இல்ல🙄Straight Out-ஆ Marriage பண்ணலாம்னு.🤩 #MMK #Behindwoods #Shorts
- வீட்ல Parents-அ கஷ்டப்படுத்த கூடாதுன்னு முடிவு எடுத்தோம்😮Parithabangal Sudhakar Love Story💖 #MMK
- ஏன் Sir நம்ம வாழ்க்கைல மட்டும் இப்படி நடக்குது🙄 Parithabangal Sudhakar Love Story💖 #MMK #Shorts