துபாயில் ஸ்கை டைவிங் செய்த பிரபல நடிகை.. "கொஞ்சம் கூட அசராம இருக்காங்களே.." வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'.

sarpatta parambarai fame dushara vijayan sky diving video viral

Also Read | மின்னல் முரளி பாத்துட்டு.. கமல் பகிர்ந்த விஷயம்.. வியப்பில் ஆழ்ந்த காளிதாஸ்.. 'Exclusive'

1970- களில் வட சென்னையில் நடந்த குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி, உருவாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ் என படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

சார்பட்டா பரம்பரையின் 'மாரியம்மா'

அதே போல, ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாயகி துஷாரா விஜயன், தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனக்கென ரசிகர் மனதில் ஒரு இடத்தையும் உருவாக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது, வசந்தபாலன்  இயக்கத்தில் அநீதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார் துஷாரா விஜயன்.

sarpatta parambarai fame dushara vijayan sky diving video viral

ஸ்கை டைவிங்கில் துஷாரா

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துஷாரா விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, துபாய்க்கு செல்லும் பலரும் அங்கே ஸ்கை டைவிங் என்னும் சாக விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், துபாய் சென்ற நடிகை துஷாரா விஜயன், வானத்தில் மேற்கொள்ளும் சாகச விளையாட்டான ஸ்கை டைவிங்கில் பயமில்லாமல், மிகவும் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ளார்.

sarpatta parambarai fame dushara vijayan sky diving video viral

வைரலாகும் வீடியோ

விமானத்தில் இருந்து குதித்து வானத்தில் பறக்கும் வீடியோவை துஷாரா விஜயன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கேப்ஷனில், "வானத்தில் உயர பறக்கிறேன். என் முகத்தில் உள்ள புரியாத தோற்றத்தையும் நான் அனுபவிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்கை டைவிங் செய்வதற்கு முன்பாக தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் துஷாரா விஜயன்.

 

Also Read | பிரம்மாண்ட படத்திற்காக விசாகபட்டினத்தில் விசிட் அடித்த ரன்பீர் - ராஜமௌலி.. வைரலாகும் Photo

 

தொடர்புடைய இணைப்புகள்

sarpatta parambarai fame dushara vijayan sky diving video viral

People looking for online information on Dushara Vijayan, Sarpatta Parambarai, Sky Diving will find this news story useful.