செம்ம Fun mode-ல் ஜெயம் ரவி… அவதார் கெட்டப்பில் வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jayam Ravi instagram Reels viral video

Also Read | KGF 2 ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? அமேசான் ப்ரைம் வெளியிட்ட ‘மாஸ்’ Update

ஜெயம் ரவி…

பிரபல திரைப்பட எடிட்டர் மோகனின் மகனும், பிரபல இயக்குனர் மோகன் ராஜாவின் தம்பியுமான ஜெயம் ரவி, 2003ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமாகி ரசிகர்களை கவனிக்க வைத்தார். முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து வெளிவந்த, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் - உனக்கும் எனக்கும், தனி ஒருவன், கோமாளி, பேராண்மை உள்ளிட்ட பல படங்கள் ஹிட் கொடுத்தனர். குறிப்பாக அவர் அண்ணன் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகின.

Jayam Ravi instagram Reels viral video

தற்போதைய படங்கள்…

‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபோல இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள அகிலன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் அகமது இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Jayam Ravi instagram Reels viral video

ஜாலி வீடியோ…

இந்நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று இனையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ஃபில்டர் மூலமாக தன்  முகத்தை அவதார் கெட்டப்புக்கு மாற்றி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்குக் கீழ் அவரின் ரசிகர்கள் பலரும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | “நம் இயக்குனரோட…” மிரட்டலான ’விக்ரம்’ மேக்கிங்… ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட BTS வீடியோ

செம்ம FUN MODE-ல் ஜெயம் ரவி… அவதார் கெட்டப்பில் வெளியிட்ட வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi instagram Reels viral video

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi instagram Reels will find this news story useful.