www.garudabazaar.com
iTechUS

"என்னது, விக்ரமன் பொய் சொன்னாரா?".. பழைய சம்பவத்தை தோண்டி எடுத்த போட்டியாளர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Shanthi about Vikraman acting skills in front of housemates

Also Read | Thalapathy 67: "இன்னும் இத்தனை நாள்ல தளபதி 67 அப்டேட்".. லோகேஷ் கனகராஜ் ரெடி!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

Shanthi about Vikraman acting skills in front of housemates

பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக மாற்ற நிறைய ஜாலியான விளையாட்டையும் பிக் பாஸ் அறிவித்து வருகிறார். இப்படியாக இந்த வாரம் முழுவதும் அட்டகாசமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்ந்த வண்ணம் உள்ளது. அதே போல, அனைத்து போட்டியாளரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தும் வருகின்றனர். இந்த நிலையில், விக்ரமன் குறித்து சாந்தி பேசும் விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக, தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள தனலட்சுமி, அனைத்து போட்டியளர்களின் விளையாட்டு குறித்தும், அவர்கள் ஆடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்களைக் கூறி இருந்தார். அதே போல, விக்ரமனிடம் முன்பு நடந்த சண்டைகள் குறித்தும் தெளிவான விளக்கங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார் தனலட்சுமி. இதனிடையே, வெளியே போன பிறகு விக்ரமன் முன்பு நடித்த சீரியலை பார்த்ததாகவும் அவர் சிறப்பாக நடித்திருந்ததாகவும் குறிப்பிட்டு பாராட்டவும் செய்திருந்தார் தனலட்சுமி.

Shanthi about Vikraman acting skills in front of housemates

அந்த சமயத்தில், விக்ரமன் முன்பு நடித்துள்ளது பற்றி அறிந்ததும் விக்ரமனிடம் பேசும் சாந்தி, "என்கிட்ட என்ன சொன்னீங்க, எனக்கு நடிக்கவே தெரியாது. நான் நடிச்சதே இல்லன்னு சொன்னீங்க" என குறிப்பிட்டார். இதற்கு பதில் சொன்ன விக்ரமன், நான் நடித்ததே இல்லை என சொல்லவில்லை என்றும் தனது விளக்கத்தையும் கொடுக்க ஆனாலும் இல்லை நீங்கள் சொன்னதே இல்லை என்றும் மறைத்து விட்டீர்கள் என்றும் சாந்தி தனது கருத்தில் நிலையாக இருந்தார். இது பற்றி ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் கருத்தை தெரிவிக்க, "எல்லாரை பத்தியும் ஆழத்துல நோண்டி எடுத்து வெளிய வெச்சுட்டாங்க" என அசல் கோலார் கூறினார்.

Also Read | ஹவுஸ்மேட்ஸ் எல்லாரையும் பத்தி ADK -வின் RAP பாடல்.. அசந்துபோன போட்டியாளர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Shanthi about Vikraman acting skills in front of housemates

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shanth, Vikraman will find this news story useful.