www.garudabazaar.com
iTechUS

“ராபர்ட் மாஸ்டர் பெரியவரு..”.. கோச்சுக்க மாட்டாரா?.. ரச்சிதா பரபரப்பு பதில்.! Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss Rachitha says robert master is elder Exclusive

Also Read | 'துணிவு' படத்தில் இன்னும் 5 TRACK.. OST ரிலீஸ் எப்போ? ஜிப்ரான் கொடுத்த EXCLUSIVE தகவல்!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார்.

bigg boss Rachitha says robert master is elder Exclusive

இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss Rachitha says robert master is elder Exclusive

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை தான் ஹர்ட் பண்ணியதாக நினைத்து அழுதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் பேசிய நடிகை ரச்சிதா,  “எனக்கு ஒரு கொள்கை உண்டு. நான் யாரையும் ஹர்ட் பண்ண கூடாது என்று நினைக்கிறேன். ராஜா ராணி டாஸ்கின் முடிவில் ராபர்ட் மாஸ்டர் சொன்னதால், நான் ஹர்ட் ஆகவில்லை. அதே சமயம் அவர் பெரியவர், அவர்  ஹர்ட்டாகி அழுவதை நினைத்தபோது எனக்கு குற்ற உணர்ச்சி உண்டானது. அதுதான் எனக்கு ஹர்ட் ஆனது” என்றும் குறிப்பிட்டார்.

bigg boss Rachitha says robert master is elder Exclusive

அப்படியானால் ராபர்ட் மாஸ்டர் பெரியவரா? இதனால் அவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா? என கேட்கப்பட்டபோது, “ஆமாம், பெரியவர் தானே? அவர் மாஸ்டர்.. மெச்சூரிட்டியிலும் சரி, வயதிலும் சரி, அனுபவத்திலும் என கூட வைத்துக் கொள்ளலாம். அவர் பெரியவர் தான்” என பதில் அளித்தார்.

Also Read | “நான் ஹர்ட் ஆகல... ஆனா அழுதேன்.. ஏன்னா..”.. ராபர்ட் மாஸ்டர் விவகாரத்தில் ரச்சிதா Open talk!

“ராபர்ட் மாஸ்டர் பெரியவரு..”.. கோச்சுக்க மாட்டாரா?.. ரச்சிதா பரபரப்பு பதில்.! BIGG BOSS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss Rachitha says robert master is elder Exclusive

People looking for online information on Bigg boss, Rachitha, Raja rani task, Robert master will find this news story useful.