www.garudabazaar.com
iTechUS

மகள் பிறந்தாளை அரசு பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா & பிரசன்னா! நெகிழ்ச்சியான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினேகா & பிரசன்னா தங்களது மகளின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடிய புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Sneha Prasanna daughter birthday celebration video and photos

                                                Image Credit : Instagram

Also Read | ஸ்வீட் எடுங்க 😍 தாய் மாமாவான சிம்பு.. தங்கை இலக்கியா பகிர்ந்த குட் நியூஸ்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா. கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

Sneha Prasanna daughter birthday celebration video and photos

Image Credit : Instagram 

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும்  ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

Sneha Prasanna daughter birthday celebration video and photos

Image Credit : Instagram

கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார். தற்போது சினேகா, மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sneha Prasanna daughter birthday celebration video and photos

Image Credit : Instagram

சமீபத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரசன்னா, சினேகா தமது குழந்தைகளுடன் பசு மாட்டிற்கு உணவளித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் மகள் ஆத்யாந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள், உடைகள், இனிப்புகள், உணவு வழங்கி சினேகா & பிரசன்னா கொண்டாடினர். பள்ளிக் குழந்தைகளுடன் மகள் ஆத்யாந்தா விளையாடிய வீடியோ காட்சிகளை பிரசன்னா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | ரீ ரிலீஸாகும் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்'.. உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Sneha Prasanna daughter birthday celebration video and photos

People looking for online information on Prasanna, Sneha, Sneha prasanna, Sneha Prasanna daughter, Sneha Prasanna daughter birthday celebration will find this news story useful.