www.garudabazaar.com

bigg boss 6 tamil : உங்களால influence ஆகி 3 தடவ தப்பு பண்ணிட்டேன்.. அசீமிடம் வெடித்த குயின்ஸி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

இந்த டாஸ்கில் ஏற்கனவே நடந்த தள்ளுமுள்ளுவில் ஷெரினா, தனலட்சுமி உட்பட அனைவரும் கீழே விழுந்தனர். இதில் ஷெரினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட மருத்துவ முதலுதவிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயத்தில் தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளிவிட்டதாக அசீம் குற்றம்சாட்டி வந்தார்.  இந்த வார இறுதியில் குறும்படம் வெளியிட்டு இதிலிருக்கும் உண்மை நிரூபிக்கப்படும் என்று தனலட்சுமியும் கூறிவந்தார்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

அப்போது அசீம், தனலட்சுமியை நோக்கி, “நீயெல்லாம் ஒரு பெண்ணா..?” என்று ஆவேசமாக கேட்ட அசீம், “உன்னுடைய தனிப்பட்ட வஞ்சகத்தை எல்லாம் வீட்டுக்குள் வெளியில் வைத்துக்கொள்!” என்று கோபமாக நிறைய திட்டியிருந்தார்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

ஆனால் இன்று தனலட்சுமியை அசீம் வேகமாக இடித்து தள்ளிவிட்டு டால் ஹவுஸுக்குள் சென்றார். ஆனால் தனலட்சுமி தடுத்து நின்றதால்தான், நான் அப்படி செய்தேன் என்றும் அசீம் விளக்கம் அளித்திருந்தார். அப்போது, பேசிய விக்ரமன், “நீங்கள் மட்டும் தனலட்சுமியிடம் நீயெல்லாம் ஒரு பொண்ணா என கேட்டீர்கள், இன்று நீங்கள் பண்ணியது தவறில்லையா? அப்படியா பிடித்து தள்ளிவிடுவீர்கள்?” என கேட்டார்.

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

இந்நிலையில் குயின்ஸி, அசீமிடம்,  “தனலட்சுமியை பார்த்து நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று நீங்கள் கேட்கவே இல்லையா ?.. அப்படி கேட்டு விட்டு இன்று நீங்களே அவளை அப்படி தள்ளி விடுவது பற்றி பேசுகிறார்கள்!” என்று கேட்க, அதற்கு அசீமோ, “நான் அப்படி கேட்கவே இல்லை” என்று உறுதிபடக் கூறினார். அப்போது குயின்ஸி, “இல்லை.. நீங்கள் சொல்லி.. உங்களால் நான் இன்ஃப்ளுயன்ஸ் ஆகி இரண்டு மூன்று தடவை தவறு செய்துவிட்டேன்” என்று சொல்ல, “அப்படியானால் மேற்கொண்டு இது பற்றி நாம் பேச வேண்டாம்” என்று அசின் கோபமாக எழுந்து சென்றுவிடுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

your influence made me to do mistake Queeny to Azeem bigg boss

People looking for online information on Azeem Ayesha fight, Azeem danalakshmi fight, Azeem vikraman fight, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman maheswari fight will find this news story useful.