www.garudabazaar.com

அசீம்க்கு சிறை.. உள்ள போறப்போ பேசுன பேச்சு.. ஒரே வார்த்தையில் சோலிய முடிச்ச மைனா 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.

azeem and shivin get into jail after worst performer in biggboss house

Also Read | "கோவக்காரன் தான்.. பாவக்காரன் இல்ல‌..".. வெளியேறுவது குறித்து அசீம் பரபரப்பு பேச்சு

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.

இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.

azeem and shivin get into jail after worst performer in biggboss house

மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக மகேஸ்வரி, ADK, அசீம் உள்ளிட்ட போட்டியாளர்களிடமும் விக்ரமன் கேள்வி கேட்கிறார். அதில், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார் அசீம். மறுபக்கம் அதில் உறுதி இல்லை என்றும் விக்ரம் கூறுகிறார். இதனால் வார இறுதியில் முறையான ஆவணங்களுடன் கமல்ஹாசன் வரும் போது தான் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

azeem and shivin get into jail after worst performer in biggboss house

இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் Worst Performer யார் என்பதையும் தெரிவிக்கின்றனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் Worst Performer மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லவும் பிக்பாஸ் கூறுகிறார்.

இந்த நிலையில், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் சிறைக்கு செல்வது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. இதில், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சிறைக்கு செல்ல தயாராகும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

azeem and shivin get into jail after worst performer in biggboss house

அப்போது தனது சிறைக்கான ஆடையை எடுத்துக் கொண்டு மைனாவிடம் பேசும் அசீம், "இதற்கு எல்லாம் அஞ்சும் மனிதன் நான் அல்ல மைனா" என கூறுகிறார். மறுகணமே அசீமை ஜாலியாக கலாய்க்கும் விதமாக "பே" என்கிறார் மைனா. "என்ன பே'ன்னுட்டே" என அசீமும் குறிப்பிடுகிறார்.

இதன் பின்னர், ஷிவின் மற்றும் அசீம் ஆகியோர் கூண்டு போல அமைக்கப்பட்டிருக்கும் சிறைக்குள் சென்றதும் அது பூட்டப்படுவதும் ப்ரோமோவில் காட்டப்படுகிறது. உள்ளே போன அசீம், "வேலை செஞ்சாலும் Worst Performer தானே, அடுத்த வாரத்தில் இருந்து No Work டா" என்றும் ஜாலியாக தெரிவிக்கிறார்.

Also Read | பாத்ரூமில் வாந்தி எடுத்த தனலட்சுமி.. ஓடி போய் உதவிய ஆயிஷா.. "என்ன நடந்துச்சு?"

தொடர்புடைய இணைப்புகள்

azeem and shivin get into jail after worst performer in biggboss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.