நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் இருந்து ‘இதமாய் இதமாய்’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும், கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக அர்ஜுனும் நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். மேலும், நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்த இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான ‘இதமாய் இதமாய்’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
‘இதமாய் இதமாய்’ - விஜய் ஆண்டனியின் ரொமாண்டிக் பாடல் வீடியோ வீடியோ