ஜங்கிள் புக் படத்தின் இயக்குநரான பேவ்ரூ இயக்கத்தில் உருவாகி உள்ள ஹாலிவுட் படம் தி லயன் கிங். இப்படம் அடுத்தமாதம் வெளியாகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்பில் அயர்ன் மேன் கதாபத்திரத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான The Lion King படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான், தி கிங் ஆப் தி ஜங்கிள் - லையன் முபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார்.
வரும் ஜூலை 19ல் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.
BIGGG NEWS... Shah Rukh Khan teams up with son Aryan to do voice over for Disney's #TheLionKing in HINDI... SRK will do voice over for the King of the Jungle, Lion Mufasa, while Aryan will do voice over for Mufasa’s son Simba... 19 July 2019 release. pic.twitter.com/lWJVK3Zoz5
— taran adarsh (@taran_adarsh) June 17, 2019