ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துவருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்நலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடன இயக்குநர் ஷோபி மற்றும் சண்டைபயிற்சி இயக்குநர் ஆகியோர் இணைந்து படப்பிடிப்பை இயக்குவது போல் உள்ளது. அந்த ட்வீட்டில், இன்ட்ரஸ்டிங் காம்போ, நடன இயக்குநரரும் சண்டை பயிற்சி இயக்குநரும் வேலை செய்யுறாங்க. தர்பார் டீரிட் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Interesting combo, fight and dance masters at work #Darbartreat pic.twitter.com/yBKbQtWhYG
— A.R.Murugadoss (@ARMurugadoss) June 15, 2019