www.garudabazaar.com

கபடி வீரராக அதர்வா.. டீச்சராக பிரியா பவானி சங்கர்.. வெறித்தனமான 'குருதி ஆட்டம்' டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும்  'குருதி ஆட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

Also Read | இலங்கை துணை உயர் ஆணையரை சந்தித்த கமல்ஹாசன்.. சந்திப்பின் பின்னணி தகவல்!

சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். 

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார்.

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். டிரெய்லர் படு வேகமாக ஆக்சன் த்ரில்லர் வகைமையில் சென்டிமென்ட் ரொமான்ஸ் கலந்து அமைந்துள்ளது. டிரெய்லர் முழுவதும் நடிகர் அஜித் குமாரின் ரெஃபரன்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

Also Read | பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்!

கபடி வீரராக அதர்வா.. டீச்சராக பிரியா பவானி சங்கர்.. வெறித்தனமான 'குருதி ஆட்டம்' டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Atharva Priya Bhavani Shankar Kuruthi Aattam Trailer

People looking for online information on Atharvaa Murali, Kuruthi Aattam, Priya Bhavani Shankar will find this news story useful.