"அந்த இளம் நடிகரா இவரு?" - ரிவீல் ஆன அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ பட வில்லன்.!
முகப்பு > சினிமா செய்திகள்ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் 'குருதி ஆட்டம்'. "எட்டு தோட்டாக்கள்" படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Also Read | BREAKING: உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
யுவன் சங்கர் ராஜா இசையில், அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வில்லனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்த அவரை பார்த்த பலரும் பாலிவுட்டில் இருந்து புதிய வில்லன் நடிகரை இறக்குமதி செய்திருக்கிறார்களோ என நினைத்திருப்பார்கள். ஆனால் காலச்சக்கரத்தை சற்றே ரீவைண்ட் செய்து பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது உதவியாளரான சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தை பார்த்தால் உண்மை புரியும்.
ஆம், அந்த படத்தில் ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா என இரண்டு ஜோடிகளை தவிர மூன்றாவதாக ஒரு ஜோடியும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக அந்த பேருந்து பயணத்தின்போது எதிர்பாராத விதமாக காதல் வசப்படும் அந்த மூன்றாவது ஜோடியில், ஒல்லியாக துருதுரு இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தாரே அவரே தான் இந்த வில்லன்.
ஆம்.. அவர் பெயர் வத்சன். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி இந்த பத்து வருடங்களில் ஒரு படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ள வத்சனுக்கு திறமையும், தீவிர உழைப்பு மட்டுமே இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. "எங்கேயும் எப்போதும்" படத்தில் ஆடிஷன் மூலம் வத்சன் தேர்வு செய்யப்பட்டார். அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ் அவரது நடிப்புத் திறனைப் பாராட்டியது மட்டுமல்லாமல்,
அவரது முருகதாஸின் தயாரிப்பான "வத்திக்குச்சி"யில் முக்கிய கதாபாத்திரத்தில் வத்சனை பரிந்துரைத்தார். எனவே, கடின உழைப்பு மட்டுமே அவருக்கு சிறந்த முறையில் சாதகமாக இருந்தது. கால ஓட்டத்தில் அப்படியே சில படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த வத்சனுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் தில் ஆன கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதன்பிறகான பயணத்தையும் "குருதி ஆட்டம்" படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததையும் பற்றி வத்சனே கூறுகிறார்.
நடிகர் வத்சன் கூறும்போது, “8 தோட்டாக்கள் படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘களவு’ என்ற படத்தில் நடிக்கும் போது இயக்குநர் ஸ்ரீ கணேஷுடன் எனக்கு நல்ல நட்பு. நான் அர்ஜுன் சுவரம் என்ற தெலுங்குப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது, ஸ்ரீ கணேஷ் அழைத்து, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை வழங்கினார். அவர் நேர்மையானவர் என்பதை அறிந்த நான், அவரது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதை உறுதி செய்தேன்.
அப்போதுதான் அவர் 'குருதி ஆட்டம்' பற்றிய விவரங்களையும், என்னை மனதில் வைத்து சேது கதாபாத்திரம் எழுதினார் என்பதையும் வெளியிட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், எந்த ஒரு யோசனையும் இல்லாமல், அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஸ்ரீ கணேஷ் என்னை ஒரு மிருகம் போல தோற்றமளிக்கும் வகையில் என் உடலை கட்டமைக்கச் சொன்னார். அவரது பார்வையின்படி, தோற்றத்தைப் பெற ஐந்து மாதங்கள் ஜிம்மில் பயிற்சி பெற்றேன். அது தற்போது சமீபத்தில் வெளியான போஸ்டரில் தெரிகிறது. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் சமீபத்திய பேட்டியில் எனது கடின உழைப்பு பற்றி பாராட்டினார்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | FANSக்கு அன்பு முத்தம் கொடுத்த அஜித்..திருச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் AK