www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ??.. கார்த்தி போஸ்டருடன் வெளியான 'அப்டேட்'!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Ponniyin selvan first single release update with karthi poster

Also Read | காட்டேரி பட shoot-ல் “மஞ்ச புடவையில் வரலஷ்மிய பார்த்து பயந்துட்டேன்!”.. அதிரவைத்த வைபவ்.!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Ponniyin selvan first single release update with karthi poster

தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தின் இசை உருவாக்க வீடியோ ஒன்றையும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல், விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ponniyin selvan first single release update with karthi poster

அதன்படி, ஜூலை மாதம் 31 ஆம் தேதி, மாலை 6:00 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான "பொன்னி நதி" வெளியாக உள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்ட போஸ்டரில் கார்த்தி குதிரையில் வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Ponniyin selvan first single release update with karthi poster

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த படத்தின் முதல் சிங்களான பொன்னி நதி பாடலையும் தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகிறார்கள்.

Also Read | பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan first single release update with karthi poster

People looking for online information on Karthi poster, Mani Ratnam, Ponniyin selvan first single release, Ponniyin Selvan Movie will find this news story useful.