கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்.. நடிகை ப்ரியா பவானி சங்கர் பதிவிட்ட ட்வீட்.
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த இவர் பின்னர் காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்தார்.

Also Read | மேஜிக் செய்த கமல் மேடையில் தோன்றிய ஸ்ருதி.. அவரே வெளியிட்ட Throwback வீடியோ..
இந்த சீரியல் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகத் தொடங்க, இவரோ மேயாத மான், டைம் என்ன பாஸ் (வெப் சீரிஸ்), கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடிக்க தொடங்கினார்.
தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஜூலை 1-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் குடும்ப பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ப்ரியா பவானி சங்கர் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நீதி வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக அக்கறையுடன் இருப்பதற்கு பாராட்டுகள் என்று தெரிவித்து வருகின்றனர். ப்ரியா பவானி சங்கர் மட்டுமல்லாது பல்வேறு திரை, அரசியல் மற்றும் ஊடக பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்தும், குரலெழுப்பியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | புதிய படத்துல ஹீரோவாகும் மற்றுமொரு Bigg Boss பிரபலம்..? - இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்.!