www.garudabazaar.com

பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Sir Movie Teaser Released

Also Read | VIDEO: Once Upon a Time பாடலுடன் வெளியான 'விக்ரம்' படத்தின் சரவெடியான சண்டைக்காட்சி!

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.  இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.

தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு  முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

தனுஷின் 39 வது பிறந்தநாள் இன்று ஜூலை 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாத்தி படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று ஜூலை 27 ஆம் தேதி வெளியானது. இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியானது.

Dhanush Vaathi Sir Movie Teaser Released

இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு  (ஜூலை 28 ஆம் தேதி) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்த டீசர் அமைந்துள்ளது. பாரதியார் கெட்-அப்பில் தனுஷ் டீசரில் ஒரு சண்டைக்காட்சியில் தோன்றியுள்ளார். திருப்பதியை கதைக்களமாக கொண்டு இந்த படம் அமைந்துள்ளது என டீசரின் மூலம் அவதானிக்கலாம்.

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன.

திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | செஸ் ஒலிம்பியாடுக்காக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ!

பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Sir Movie Teaser Released

People looking for online information on Dhanush, Dhanush Vaathi Movie, Vaathi Movie, Vaathi Sir Movie Teaser will find this news story useful.