அதர்வா-அனுபமா படத்தின் STR-GVM ஸ்டைல் டைட்டில்! பக்கா ட்ரென்டிங் மெட்டிரியல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா அனுபமா நடிக்கும் படத்தின் க்ளாசிக்கான டைட்டிலை ஃபர்ஸ்ட் லுக்குடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

atharva anupama r kannan movie title is thalli pogathey

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் அதர்வா. இவர் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ப்ரேமம், கொடி ஆகிய படங்களில் நடித்த அனுபமா கதாநாயகியாக நடிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.கண்ணனே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தள்ளி போகாதே என பெயரிடப்பட்டிருக்கிறது. அதர்வாவும் அனுபமாவும் காதலுடன் நெருக்கமாக இருப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹிட் அடித்த தள்ளி போகாதே பாடலின் முதல் வரியை டைட்டிலாக அறிவித்திருக்க, தள்ளி போகாதே தற்போது ட்ரென்ட் அடித்து வருகிறது.

Entertainment sub editor