சந்திரமுகியின் அடுத்த பார்ட்டோ..? - ப்ரேமம் அனுபமாவின் க்யூட் அவதாரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

anupama parameswaran gives chandramukhi pose in a photo

ப்ரேமம் படத்தில் நடித்து அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் மூலம் இவர் மலையாள சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானார். இதையடுத்து தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் மலையாளத்தில் நானி, ராம் பொத்தினேனி, சாய் தரம் தேஜ், ஷர்வானந்த் உள்ளிட்ட ஹீரோக்களுடன் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். பரதநாட்டியம் ஆடுவது போல பாவனை செய்து அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவுடன், 'சில நேரங்களில் நாகவல்லியும் சந்திரமுகியும் வந்து விடுகிறார்கள்' என பதிவிட்டுள்ளார். சந்திரமுகியின் ஒரிஜினலான மனிசித்ரதாழ் படத்தில் ஷோபனாவின் கேரக்டர் பெயர் நாகவல்லி என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகியின் அடுத்த பார்ட் எடுத்தால் அதற்கு அனுபமா பக்காவாக இருப்பார் என போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sometimes the “Nagavalli” or the “Chandramukhi “ comes out 😬

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

Entertainment sub editor