இது சந்தானத்தின் சிலம்பாட்டம் - விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Santhanam learns Silambam for Kannan's film shoot begin from August 15

'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தை தொடர்ந்து ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘A1’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து, ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்காக ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வாவிடம் நடிகர் சந்தானம் சிறப்பாக சிலம்பம் கற்று வருகிறார். கிராமிய பின்னணியில் சமூக அக்கறையுள்ள கதையம்சத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆக்ஸ்ட்.15ம் தேதி முதல் தொடங்கும் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே, விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ என்ற திரைப்படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இது தவிர சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.