பிரபல இயக்குநருடன் சந்தானம் இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 18, 2019 02:55 PM
'ஏ1' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சந்தானம் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து 'டிக்கிலோனா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 18) முதல் துவங்கி நடைபெற்று வருவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் அனகா, ஷிரின், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், சித்ரா லெட்சுமணன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் நிறுவனமும் தயாரித்து வந்தன.
இந்த படத்தில் சந்தானத்தின் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, மற்றும் ஸ்வாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.
மேலும், இந்த படத்தில் சிறு பணிகள் மட்டுமே மீதமுள்ளது எனவும் கூறப்படுகிறது. வித்தைக்காரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படம் அடுத்தவருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.