'மிகுந்த மரியாதை வைத்தேன்.. வேண்டுமென்றே என்னை அழிக்க' - சனம் ஷெட்டி பிரிவுக்கு பின் தர்ஷன் Opens!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு உருக்கமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
![biggboss tharshan opens after sanam shetty's break up biggboss tharshan opens after sanam shetty's break up](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/biggboss-tharshan-opens-after-sanam-shettys-break-up-news-1.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் தர்ஷன். அப்பாவித்தனமான சுபாவம், அழகான ஈழத்தமிழ் பேச்சு என தர்ஷனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து இவரை படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் தர்ஷனுக்கும் அவரது காதலியான சனம் ஷெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சனம் ஷெட்டி தர்ஷன் மீது புகார் அளித்து வெளிப்படையாக மீடியாவில் பேசினார். இதை தொடர்ந்து தர்ஷனும் மீடியாவை சந்தித்து தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தார்.
இந்நிலையில் சனம் ஷெட்டியுடனான பிரிவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்த தர்ஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'இருவரில் ஒருவருக்கு சந்தோஷம் இல்லை என்றாலும் அந்த ரிலேஷன்ஷில் தோற்றுவிடும். விஷயங்கள் கடினமாகிவிடும் முன்பே, தனித்தனியே செல்வது தான் சிறந்தது. மகிழ்ச்சியற்ற ரிலேஷன்ஷிப்பில் என்ன காரணம் சொன்னாலும் இருக்க கூடாது. யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்தேன், ஆனால் யதார்த்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, வேண்டுமென்றே அவர்கள் என்னை அழிக்க நினைத்தார்கள். என் மீது வைக்கப்பட்ட புகார்கள் எதுவும் உண்மையில்லை. இதனால் மீடியா மற்றும் உண்மை என்னவென்று தெரியாதவர்கள் முன் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். இதனால் மன வேதனை அடைந்த நான் சமூக வலைதளங்களில் இருந்து சற்று விலகி இருந்தேன். வாழ்க்கையில் பின்னடைவு வருவது இயற்கையானது தான். நான் இதிலிருந்து கற்றுக்கொண்டு, எனது எதிர்காலத்தின் மீது ஃபோக்கஸாக இருக்கிறேன். இப்படியான நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார்.