எழுத்தாளரை மணந்தார் ‘லக்ஷ்மி’ குறும்பட நாயகி.!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 30, 2019 06:18 PM
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ‘லக்ஷ்மி’ குறும்பட ஹீரோயின் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி

கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘முன் தினம் பார்த்தேனே’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லக்ஷ்மி பிரியா, நயன்தாரா நடித்த ‘மாயா’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வரும் லக்ஷ்மி பிரியா, மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ‘லக்ஷ்மி’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். லக்ஷ்மி என்ற பெண்ணின் கதையை பற்றிய அப்படத்தில், அவரது தகாத உறவை குறித்து பேசப்பட்டிருக்கும். இதன் மூலம் லக்ஷ்மி பிரியா மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், லக்ஷ்மி பிரியா வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராகவன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் எழுத்தாளர் ஆவார். இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களது திருமணம் சங்கீத், மெஹெந்தி, முகூர்த்தம் என கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தியேட்டர் துறை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். புதுமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்!