அருண் விஜய் படத்தின் வில்லன் யார் தெரியுமா.? - பிரபல தயாரிப்பாளரின் வெறித்தனமான லுக்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிக்கும் பாக்சர் திரைப்படத்தின் வில்லன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அருண்விஜய் படத்தின் வில்லன் யார் தெரியுமா.? | arunvijay's boxer film announces producer v mathiyalagan as villian

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். அஜித்துடன் இவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம், இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இவர் நடித்த தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவர் தற்போது அறிவழகன் இயக்கும் தனது 31-வது படத்தில் பிசியாகவுள்ளார். 

இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பாக்சர் திரைப்படத்தில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் வில்லனாக, பிரபல தயாரிப்பாளர் வி. மதியழகன் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Etcetra Entertaintment நிறுவனம் சார்பில், செம போத ஆகாத, கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இதையடுத்து அருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் பாக்சர் திரைப்படத்திற்கு உடலை மெருகேற்றை ஃபிட்டாக காட்சியளிக்கும் தயாரிப்பாளர் மதியழகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. விவேக் இயக்கும் இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

 

அருண்விஜய் படத்தின் வில்லன் யார் தெரியுமா.? | arunvijay's boxer film announces producer v mathiyalagan as villian

People looking for online information on Arun Vijay, Boxer, Mathiazhagan, Ritika singh will find this news story useful.