நிச்சயமா தற்கொலை இல்ல கொலைதான்-சுஷாந்த் மரணம் பற்றி பிக்பாஸ் நடிகை வெளியிட்ட தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து இறந்தார். அவரது அதிர்ச்சியூட்டும் மறைவு தற்கொலையாக இருக்காது இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி இருப்பதாக சுஷாந்தின் உறவினர்கள் தெரிவித்தார்கள்.

Payal Rohatgi released a video about sushand singh rajput death

இளம் வயதில் அவரது மறைவுக்கு சோஷியல் மீடியாவில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது, மேலும் இது தற்கொலை அல்லது கொலை என்பது குறித்த தீர்மானமான அறிக்கைகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் ஒரு வீடியோவில் பாலிவுட்டைச் சேர்ந்த பிக் பாஸ் 2 போட்டியாளர் பாயல் ரோஹத்கி கூறினார். சுஷாந்தின் மரணம் நிப்போடிஸம் மட்டுமல்ல அவரது முன்னாள் காதல் பிரச்சனை  போன்றவற்றின் விளைவாக இருந்தது என்றார்.

அவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் உள்ள நிலையில், இப்போது, பாயல் தனது சமூக வலைத்தளங்கில் பகிர்ந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் அவர் சுஷாந்தின் மனநல மருத்துவரை அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், பாயல் தன்னிடம் வரும் யாவருக்கும் பை போலார் கோளாறுக்கான சிகிச்சையைத்தான் அந்த மனநல மருத்துவர் அளிக்கிறார் என்று கூறுகிறார். சுஷாந்த் சிங்கின் மரணம் கொலைக்கான பல சாத்தியக்கூறுகளுடன்  இருப்பதாக அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், அதற்கான காரணங்களையும் பாயல் விரிவாக கூறினார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்

முழுமையான தகவலுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Payal Rohatgi released a video about sushand singh rajput death

People looking for online information on Payal Rohatgi, Sushant Singh Rajput will find this news story useful.