''பாக்ஸர்'' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்! படம் குறித்து மனம் திறக்கிறார் நடிகர் அருண் விஜய்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தற்போது தொடர்ந்து வருகிறது. கோலிவுட் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் இல்லாததால் திரைப் பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

Arun vijay updates about his most expected movie Boxer

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிக்ஸ்பேக் உடற்கட்டுக்களுடன் இருக்கும் டிரான்ஸ்ஃபர்மேசன் ஃபோட்டோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் முடியாதது எதுவுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அருண் விஜய் 'தடம்', 'மாஃபியா' என அடுத்தடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.  இதனையடுத்து 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'அக்னி சிறகுகள்' படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பாக்ஸர், ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் 'சினம்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

அதனைத் தொடர்ந்து 'குற்றம் 23'க்கு பிறகு இயக்குநர் அறிவழகனுடன் இணைந்து 'ஜிந்தாபாத்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் பாக்ஸர் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்க்ளிடையே உள்ளது. ஆனால் இந்தப் படம் லாக்டவுன் காலகட்டத்தால் தொடக்கத்திலிருந்தே சிக்கலாக இருந்து வந்தது. 'பாக்ஸர்' படம் குறித்து  தகவல்கள் எதுவுமில்லாத சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி 'பாக்ஸர்' படம் குறித்த முக்கியமான தகவலை இன்று (ஜூன் 24) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் சோஷியல் மீடியாவில் கூறியுள்ளனர்.

தற்போது இது குறித்து அருண் விஜய் கூறியது, ' அனைவருக்கும் வணக்கம், என்னுடைய படம் பாக்ஸரைப் பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், பாக்ஸர் படத்துக்கா உங்கள் அனைவரையும் போல நானும் உற்சாகமாக இருக்கிறேன்.

இந்த படத்துக்காக என்னை தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த படத்துக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தீவிர பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுவதால், அதற்கான காலம் தொடர்ந்து தேவைப்படும், அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே படம் குறித்து எனது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தயவு செய்து காத்திருங்கள். அதுவரை உங்கள் அனைவருக்காகவும் இதோ ஒரு ஃபோட்டோ’ என்று கூறி பாக்ஸர் படத்திலிருந்து ஒரு க்ளிக் அனுப்பியிருந்தார்.

இந்தச் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Arun vijay updates about his most expected movie Boxer

People looking for online information on Arun Vijay, Boxer will find this news story useful.