சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு திரையுலகினை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ’ராட்சசி’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோதிகாவுக்கு Best Actor Female விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. நடிகை நதியா இந்த விருதையும் பதக்கத்தயும் ஜோதிகாவுக்கு வழங்கினார். விருது பெற்ற ஜோதிகா பேசுகையில், ‘திரைப்படங்களை தான் ஒரு உந்துசக்தியாக பார்க்கிறேன்’ என தெரிவித்தார்.
‘திரைப்படங்கள் மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. ராட்சசி படம் பார்த்துவிட்டு மக்களே முன்வந்து வசதிகள் அற்ற பள்ளிகளை மேம்படுத்தியுள்ளதாகவும். இன்னும் சில பள்ளிகளில் புழக்கத்தில் இருந்த சாதிக்கயிறு நடைமுறை தகர்க்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நிகழ்வை தொகுத்து வழங்கிய பார்த்திபன் ’ஒத்த செருப்பு’ படத்தில் நடித்ததற்கு ஜோதிகா பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து சூர்யாவின் தங்கையும் பின்னணி பாடகியுமான பிரிந்தா சிவகுமார் ராட்சசி படத்தில் இடம்பெற்ற ’நீ என் நண்பனே’ பாடலை மேடையில் பாடினார். இந்த காணோலியைக் காண கீழே சொடுக்கவும்.
ஜோதிகா அதிரடி – ’GOVERNMENT இல்ல, மக்கள் பண்ணாங்க…’! வீடியோ