தனுஷின் அடுத்த படத்தில் இணையும் பிரபல இயக்குநர்! -ரிலீஸ் எப்போணு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'ஒவ் நாட் ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜின் படத்தில் தனுஷ் நடித்தார். பெரும்பாலும் லண்டனில் நடைபெற்ற அதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Dhanush D43 directed by Karthick Naren GV releases on october 2020

இதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வர தனுஷின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி பரவிக் கொண்டிருந்தது. அது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சத்யஜோதி நிறுவனம், இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தயாரித்து இயக்குகிறார் என்று தெரிவித்துள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட் துவங்க உள்ள நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் படம் ரிலீசாகும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தனுஷ் -ராம்குமார்   திரைப்படம்  மெகா  பட்ஜெட் மற்றும்   முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரம் தேவை  காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "தனுஷ் 43 " அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .

 

Entertainment sub editor