பிரசன்னா செம கோபத்துல "F***king...'' - அமைச்சர் குறித்து வெளியான வீடியோவிற்கு ரியாக்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீநிவாசன் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற போது, அங்கிருந்த சிறுவனை கூப்பிட்டு தன் செருப்பை கழட்ட சொல்லியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அமைச்சரை கடுமையாக விமர்சித்தனர்.
அதன் ஒரு பகுதியாக இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, கெட்ட வார்த்தை பயன்படுத்தி அருவருப்பாக இருப்பாத தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னா, அருண் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள 'மாஃபியா' திரைப்படம் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.
This is so f***king nauseating! https://t.co/oHdKZmNtoY
— Prasanna (@Prasanna_actor) February 6, 2020
பிரசன்னா செம கோபத்துல "F***KING...'' - அமைச்சர் குறித்து வெளியான வீடியோவிற்கு ரியாக்ஷன் வீடியோ