தன்னோட 30வது படத்தில் மீண்டும் இந்த பிரபலத்தோடு இணையும் அருண் விஜய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 16, 2019 03:29 PM
'தடம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய் 'மாஃபியா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரசன்னாவும் நடிக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
![Arun Vijay joins again with Madhan Karky in GNR Kumaravelan's film Arun Vijay joins again with Madhan Karky in GNR Kumaravelan's film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/arun-vijay-joins-again-with-madhan-karky-in-gnr-kumaravelans-film-photos-pictures-stills.jpg)
லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இதனையடுத்து அருண் விஜய், 'நினைத்தாலே இனிக்கும்', 'ஹரிதாஸ்' படங்களின் இயக்குநர் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
அருண் விஜய்யின் 30 வது படமான இதில் அவருக்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார். இந்த படத்துக்கு சபீர் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தடம்' படத்துக்கு பிறகு இனயே பாடலுக்கு பிறகு மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன். சபீர் மதிமயக்கும் இசைக்காக காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Collaborating with the brilliant @madhankarky once again after #inayae, for #AV30!
Waiting to be mesmerized to the tunes of @ShabirMusic... Excited 🤩 @DoneChannel1 @gnr_kumaravelan #MovieSlidesPvtLtd pic.twitter.com/p2cq7aDG4l
— ArunVijay (@arunvijayno1) October 16, 2019