இந்த டபுள் ஹீரோ பட டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய அக்ஷரா ஹாசன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 12, 2019 12:19 PM
'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'அக்னி சிறகுகள்'. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஷாலிணி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக்பாஸ் மீராமிதுன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்க, கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
'கடாரம் கொண்டான்' படத்துக்கு பிறகு நடிகை அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்ஷரா ஹாசனின் பிறந்தநாளை அருண் விஜய், விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், சென்றாயன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.