“சிங்கமா? நரியா? யுத்ததுல ஜெயிக்கறது யார்?” - மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 16, 2019 05:07 PM
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.
“சிங்கமா? நரியா? யுத்ததுல ஜெயிக்கறது யார்?” - மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வீடியோ வீடியோ
Tags : Arun Vijay, Karthick Naren, Priya Bhavani Shankar, Mafia