‘Censor முடிஞ்சது! தளபதியின் வெறித்தனமான ஆட்டம் விரைவில்..’ - பிகில் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார்.

Producer Archana Kalpathi on Vijay's Bigil release date

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பிகில் படத்தில் விஜய்யின் வித்தியாசமான லுக், மாஸ் கிளப்பும் அவரது வசனங்கள், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.