‘அக்னி சிறகுகள்’ படத்தில் இணைந்த குட்டி ஹாசன்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 03, 2019 05:15 PM
‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நாளை (அக்.4) ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது.

டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கிம் இப்படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நாளை (அக்.4) முதல் தொடங்கவுள்ளது. ஐரோப்பா, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் முதற்கட்டமான 50 நாட்கள் தொடர் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. இதற்காக ‘அக்னி சிறகுகள்’ படக்குழுவினர் வெளிநாடு புறப்பட்டுச் சென்றனர்.
இப்படத்தில் கூடுதலாக, பிரபல நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார். சமீபத்தில் விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்ற அக்ஷரா ஹாசன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். படக்குழுவுடன் அக்ஷரா ஹாசனும் வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.