"Brilliant Work கண்ணா.." - இளம் இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 14, 2019 11:57 AM
‘துருவங்கள் 16’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ படக்குழுவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், நிவேதா தாமஸ், யோகி பாபு, ஜீவா, ஜட்டின் சர்னா, பிரதேய்க் பாபர், நவாப் ஷா, பேபி மானஸ்வி கொட்டாச்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இளம் இயக்குநர்களின் புதிய படைப்பை பார்த்து வியந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மாஸ் டீசர், வரும் செப்.20ம் தேதி வெளியாகவிருக்கும் நடிகர் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டீசர் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அதனை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் நரேனை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துளார். “Brilliant Work கண்ணா.. செம்மயா இருக்கு. பிடிச்சிருக்கு” என டீசர் குறித்து ரஜினிகாந்த் கூறியதாக இயக்குநர் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason 🤟🏻 pic.twitter.com/e6pdZtOjbI
— Karthick Naren (@karthicknaren_M) September 14, 2019