நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டுக்கு விரைந்த IT அதிகாரிகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.

income tax officials raid vijay panaiyur house over tax issues

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் சுப்பர் ஹிட் அடித்தது. அண்மையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் நேற்று பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, நெய்வேலியில் நடந்து கொண்டிருந்த விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரடியாக சென்று, வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் வழங்கினர். இதையடுத்து மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் விஜய் நெய்வேலியில் இருந்து சென்னை புறப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள விஜய்யின் பனையூர் வீட்டிற்கு, ஒரு பெண் அதிகாரி உட்பட, நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Entertainment sub editor