www.garudabazaar.com

"அஜித் நடித்த வாலி படம் பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம்".. தயாரிப்பாளர் PL தேனப்பன் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித்

Vijay about AjithKumar Vaali Movie PL Thenappan Exclusive

& விஜய்.

தளபதி என்று திரை ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையேக் கொண்டுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது.

Vijay about AjithKumar Vaali Movie PL Thenappan Exclusive

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

அதேபோல் விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay about AjithKumar Vaali Movie PL Thenappan Exclusive

இந்நிலையில்  பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் PL தேனப்பன் அளித்துள்ளார்.‌ அதில், "நானும் விஜய்யும் மின்சாரக் கண்ணா பட ஷூட்டிங்குக்கு சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அப்போது விஜய் சார்க்கு அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். அப்போது விஜய் சொன்னார், "வாலி படம் ரிலீஸ் ஆகிருக்கு. ரொம்ப சூப்பரா இருக்கு. நான் பாத்துட்டேன். அந்த இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை மீட் பண்ணுங்க" என்று விஜய் சொன்னார்". என விஜய் கூறியதாக தயாரிப்பாளர் தேனப்பன் கூறினார்.

வாலி திரைப்படம் 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

"அஜித் நடித்த வாலி படம் பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம்".. தயாரிப்பாளர் PL தேனப்பன் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay about AjithKumar Vaali Movie PL Thenappan Exclusive

People looking for online information on Ajith Kumar, Vaalee, Vaali, Vijay will find this news story useful.