Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. வில்லனாக அரவிந்த்சாமியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Aravindsamy joined as a antagonist in Venkatprabhu Nagachaitanya movie

Also Read | VIDEO: வாரிசு ஷூட்டிங்கில் PS1 பாட்டுக்கு VIBE-ஆகும் விஜய்.. பிரபல நடிகர் சொன்ன செம தகவல்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

Aravindsamy joined as a antagonist in Venkatprabhu Nagachaitanya movie

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார்.

Aravindsamy joined as a antagonist in Venkatprabhu Nagachaitanya movie

கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.

இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் S.R. கதிர் இணைந்துள்ளார்.

Aravindsamy joined as a antagonist in Venkatprabhu Nagachaitanya movie

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக  பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த்சாமி ஏற்கனவே தமிழில் தனி ஒருவன் & போகன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கில் தனி ஒருவன் படத்தின் ரீமேக் துருவா படத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | அஜித்துடன் மஞ்சு வாரியர் BIKE RIDE PHOTOS.. ஆச்சரியத்தில் கமெண்ட் செய்த கல்யாணி பிரியதர்ஷன்!

Aravindsamy joined as a antagonist in Venkatprabhu Nagachaitanya movie

People looking for online information on Arvind Swamy, Naga chaitanya, Nagachaitanya movie, Venkat Prabhu will find this news story useful.