மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற வேடத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் அட்டகத்தி, கபாலி போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது சிறகு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான குட்டி ரேவதி இயக்கியுள்ளார். இந்த படத்தை மாலா மணியன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் பயணம் ஒரு பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அரோல் குரோலி இசையமைக்க, ராஜா பட்டச்சார்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்..
இந்த படத்தில் அக்ஷிதா,காளி வெங்கட், நிவாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீஸரை இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள 'சிறகு' படத்தின் டீஸர் இதோ வீடியோ