'கற்றவை பற்றவை' - இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்த பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Hari Krishnan to act in Pa.ranjith's Neelam Productions film

அதனைத் தொடர்ந்து தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு என்கிற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த அதியன் ஆதிரை இயக்குகிறார்.

அதனைத் தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

மெட்ராஸ் படத்தில் ஜானி என்கிற வேடத்தில் நடித்திருந்த ஹரி கிருஷ்ணன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை பாஸ்கர் சாமி இயக்குகிறாராம். இவர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.  இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி முடிவு செய்யப்படவில்லை.