விஜய் சேதுபதி தற்போது அருண் குமார் இயக்கத்தில் 'சிந்துபாத்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதனையடுத்து அவர் நடிக்கும் சங்கத் தமிழன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதனையடுத்து அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. இந்த படத்தை வெங்கட் கிருஷ்ணாரோக்நாத் இயக்கவுள்ளார்.
இவர் இயக்குநர் ஜெகநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரந்துள்ளாராம். இந்த படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை (14.06.2019) பழனியில் தொடங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.